Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நிதி, சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, கலாசார அலுவல்கள் பொக்குவருத்து, காணி, நீர் பாசனம், பொருலாதாரமெம்பாடு கிராமிய உட்கட்மைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தறை அமைச்சு
முகப்பு கேல்விகளும் பதில்களும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

  • தனிப்பட்ட தேவைகளுக்காக வாகனம் அல்லது பொறித்தொகுதியைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு முதலில் அதுபற்றி கடிதம் மூலமாகவோ தொலைபேசியினூடாகவோ மாகாண பொறிமுறை பணிப்பாளரிடமோ கேட்டறிய முடியும்.
  • அதன் பின்னர் அந்த பொறித்தொகுதியை அல்லது வாகனம் ஈடுபடுத்தப்படுகின்ற இடம்பற்றிக் கண்டறிந்து அவசியமெனில் வெளிக்களத்திற்கு விஜயம் செய்த புலனாய்வு செய்து பொறித்தொகுதி அல்லது வாகனத்தை வழங்கக்கூடிய சாத்திய நிலை, நிறுவனம் மூலமாக தீர்மானிக்கப்படும்.
  • வாகனம் அல்லது பொறித்தொகுதியை வழங்குவது பொருத்தமானதெனில் நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்ட பணத்தொகையை வழங்கி பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட பற்றுச்சீட்டினை வாகன வாடகைப் பிரிவிடம் சமர்ப்பித்து வாகனத்தையோ பொறித்தொகுதியையோ உரிய பணிக்காக ஏற்புடைய தினங்களுக்காக பெற்றுக்கொள்ளலாம்.
  • சம்பந்தப்பட்ட வாகனத்தை அல்லது பொறித்தொகுதியை வாடகைக்குப் பெற்றுக்கொள்பவரால் எரிபொருள் வழங்கும் அடிப்படையிலேயே அவை வழங்கப்படும்.
  • அத்துடன் மேற்படி பொறித்தொகுதியை அல்லது வாகனத்தை கொண்டுசெல்ல வேண்டிய நிலையேற்பட்டால் அப்பணியையும் (எடுத்துச் செல்லலும் மீள ஒப்படைத்தலும்) வாடகைக்கு எடுக்கும் தரப்பினராலேயே மேற்கொள்ளப்படல் வேண்டும்.
  • கட்டணங்களுக்காக தயவுசெய்து (புகைப்பட கலரியைப் பார்க்கவும்)

  • வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளக்கூடிய வாகனங்கள் மற்றும் பொறித்தொகுதிகள் பற்றிய விபரங்கள் புகைப்பட கலரியின் கீழ் காட்டப்பட்டுள்ளன. தயவு செய்து புகைப்படக் கலரியைப் பார்க்கவும்.

  • ஏதேனும் நிறுவனமொன்றின் / திணைக்களமொன்றின் / அமைச்சின் அல்லது அலுவலகத்தின்  வாகனமொன்iறைப் பழுதுபார்க்கும் பொருட்டு முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத் தலைவர் ஊடாக தமது தேவைப்பாட்டினைக் குறிப்பிட்ட கடிதமொன்றை வாகனப்பழுதுபார்த்தல் கூறிடம் அல்லது மாகாண பொறிமுறை பணிப்பாளர் அலுவலகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட கடிதத்திற்கு விதப்புரை சமர்ப்பிக்கப்படுவதோடு அதற்கு இணங்குவதாயின் பதுளை பழுதுபார்த்தல் கூறு மூலமாக ஏற்புடைய உதிரிப் பாகங்களை இடாமல் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற உதிரிப் பாகங்களை இட்டு வாகனம் பழுதுபார்க்கப்படுவதோடு சேவைகள்  கட்டணத்திற்கான பற்றுச்சீட்டு சமர்ப்பிக்கப்படும்.
  • கஹகொல்ல மாகாண பொறிமுறைப் பணிப்பாளர் அலுவலகத்தின் தொழில்நுட்பப் பிரிவில் மேற்படி பழுதுபார்த்தல் மேற்கொள்ளப்படுமாயின் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் உதிரிப் பாகங்கள் வழங்கப்பட்டோ மாகாண பொறிமுறைப் பணிப்பாளர் அலுவலகத்தினால் உதிரிப்பாகங்கள் இடப்பட்டோ பழுதுபார்த்தல் மேற்கொள்ளப்படும்.
  • உதிரிப்பாகங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் வழங்கப்படுமாயின் பழுதுபார்த்தல் கட்டணம் மாத்திரம் அறவிடப்படுவதோடு உதிரிப்பாகங்கள் மாகாண பொறிமுறை பணிப்பாளர் அலவலகத்தினால் இடப்படின் உதிரிப்பாகங்களுக்கும் பழுதுபார்த்தலுக்குமான கட்டணங்கள் அறவிடப்படும்.
  • கட்டணங்களுக்கான விலைப்பட்டியல் வழங்கப்படும் அந்த விலைப்பட்டியல் தீர்க்கப்பட்ட பின்னர் மேற்படி பணிகள் நிறைவடையும்.

  • ஏதேனும் நிறுவனம் / திணைக்களம் / அமைச்சு  அல்லது அலுவலகத்திற்குச் சொந்தமான வாகனமொன்றை சீர்காப்பு செய்ய முதலில் நிறுவனத் தலைவரால் தமது தேவையைக் குறிப்பிட்டு கடிதமொன்றை வாகன நீர்காப்பு நிலையத்திற்கோ மாகாண பொறிமுறைப் பணிப்பாளரிடமோ சமாப்பிக்க வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட வாகனத்திற்கு விதப்புரை சமர்ப்பிக்கப்படுவதோடு அதற்கு இணங்குவதாயின் வாகன சீர்காப்பு நிலையம் மூலமாக சம்பந்தப்பட்ட உதிரிப் பாகங்கள் இடப்பட்டு வாகனம் சீர்காப்பு செய்யப்படுவதோடு, சேவைகள் கட்டணம், உதிரிப் பாகங்கள் மற்றும் உராய்வு நீக்கிகள் ஆகியவற்றுக்கான கட்டணம் தொடர்பில் விலைப்பட்டியலொன்று சமர்ப்பிக்கப்படும். அந்த விலைப்பட்டியல் தீர்க்கப்பட்ட பின்னர் மேற்படி பணிகள் நிறைவடையும்.

  • ஏதேனும் நிறுவனம் / திணைக்களம் / அமைச்சு அல்லது அலுவலகத்திற்குச் சொந்தமான வாகனமொன்றைப் பரிசீலனை செய்ய வேண்டுமாயின் முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத் தலைவரூடாக தமது தேவையைக் குறிப்பிட்டு கடிதமொன்றை வாகன பராமரிப்பு கூறுக்கோ மாகாண பொறிமுறை பணிப்பாளர் அலுவலகத்திற்கோ சமாப்பிக்க வேண்டும்.
  • அதற்கிணங்க வாகனத்தைப் பரீட்சித்துப் பார்த்து வாகனம் பற்றிய விதப்புரை சமர்ப்பிக்கப்படும்.
  • கட்டணத்திற்காக ரூ. 200/- ற்கான விலைப்பட்டியலொன்று சமர்ப்பிக்கப்படும். அந்த விலைப்பட்டியல் தீர்க்கப்பட்ட பின்னர் மேற்படி பணிகள் நிறைவடையும்.

  • ஒவ்வோராண்டிலும் ஒக்டோபர் மாத இறுதி வாரத்திலும் வார நாட்களிலும் வார இறுதி சிங்கள மற்றும் ஆங்கில செய்தித்தாள்களில் பிரசுரிக்கப்படுகின்ற பகிரங்க செய்தித்தாள் அறிவித்தலுக்கிணங்க அடுத்த வருடத்திற்கான வழங்கலாளர்களைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படும்.

  • வாகனத்திற்கான தகுதிச் சான்றிதழைப் பெற எதிர்பார்ப்பவர்கள் முதலில் நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்ட வாகனத்தைக் கொண்டுவந்து நிறுவனத்தினால் விநியோகிக்கப்படுகின்ற படிவம் மூலமாக விண்ணப்பம் செய்தல் வேண்டும். (படிவம் பதிவிறக்கத்தின் கீழ்காட்டப்பட்டுள்ளது.)
  • நிறுவனத்தினால் வாகனம் பரிசோதிக்கப்பட்டு மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் தகுதிச் சான்றிதழும் மேலதிக அறிக்கைகளும் விநியோகிக்கப்படும். இதன் பொருட்டு நிறுவனத்திற்கு ரூ. 250/- செலுத்தி பற்றுச்சீட்டொன்றைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

 
மார்ச் 2024
S M T W T F S
25 26 27 28 29 1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31 1 2 3 4 5 6