Sinhala (Sri Lanka)English (United Kingdom)
நிதி, சட்டமும் ஒழுங்கும், கல்வி, உள்ளூராட்சி, கலாசார அலுவல்கள் பொக்குவருத்து, காணி, நீர் பாசனம், பொருலாதாரமெம்பாடு கிராமிய உட்கட்மைப்பு அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்தறை அமைச்சு
முகப்பு எம்மைப் பற்றி தனித்துவமான தகவல்கள்

திணைக்களத்திற்கே தனித்துவமான தகவல்கள்

எதிர்காலத் திட்டங்கள்

  1. மொனறாகல மாவட்டத்திற்கான வாகனப் பழுதுபார்த்தல் கூறு ஒன்றினை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளமை.
  2. பதுளை வாகனப் பழுதுபார்த்தல் கூறு புதிய இடமொன்றில் நிறுவப்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளமை.
  3. மாகாண பொறிமுறைப் பணிப்பாளர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கனரக வாகன இயக்குநர்களைப் பயிற்றுவப்பதற்கான நிறுவனமொன்றை தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளமை
  4. மாகாண பொறிமுறைப் பணிப்பாளர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கனரக வாகன இயக்குநர்களைப் பயிற்றுவிப்பதற்கான நிறுவனமொன்றை தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளமை.
  5. முற்பணக் கணக்கின் கீழ் இயங்குகின்ற நிர்மாணக் கூறினைத் தாபித்தல்.
  6. கணினிகளைப் பழுதுபார்ப்பதற்கான புதிய கூறு ஒன்றைப் தாபித்தல்.

பெறப்பட்டுள்ள வெற்றிகள், திறன்கள் மற்றும் விசேட நிகழ்ச்சித்திட்டங்கள்

2009.02.02 ஆம் திகதியன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளவில் நடத்தப்பட்ட  'தெயட்ட கிருள' கண்காட்சியில் ஊவா மாகாண சபைக் கூடத்தைப் பிரதிநிதித்துவம் செய்து நீராவியால் இயங்குகின்ற வீதி அழுத்தும் கருவியொன்றின் மாதிரியொன்று தயாரித்து சமர்ப்பிக்கப்பட்டது. இங்கிலாந்தின் யுஎiபெ ரூ குழசவநச எனும் கம்பெனியில் ஆரம்ப காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இக்கம்பெனிக்குச் சொந்தமான பழைய வீதி அழுத்தும் கருவியை சார்ந்ததாக இந்த வீதி அழுத்தும் கருவியின் மாதிரி தயாரிக்கப்பட்டதோடு அது ஊவா மாகாண சபை முதலமைச்சரால் பாராட்டப்பட்டது.

2009.09.02 ஆம் திகதி சுயாதீன தொலைக்காட்சியின் அட்டபட்டம் நிகழ்ச்சியின் ஊடாகவும் ஒளிபரப்பப்பட்டு பாராட்டப்பட்டதோடு அதன் மூலமாக பாரியளவில் மக்கள் பிரதிபலிப்பு கிடைத்தமையைக் குறிக்குமுகமாக பல்வேறு தராதரங்களைச் சேர்ந்த ஆட்கள் அந்த மாதிரியினையும் பழைய வீதி அழுத்தும் கருவியினையும் பார்வையிட நிறுவனத்திற்கு வருகை தருகின்றமை நாம் பெற்ற வெற்றியாகும்.

தம்பானையில் பூர்வீகக் குடிகளுக்காக 'தடபிமென் கொவிபிமட்ட' எனும் தொனிப்பொருளின் கீழ் விலங்கு வேட்டை மூலமாக தமது வாழ்வாதாரத்தை தேடிக் கொள்வதற்குப் பதிலாக வேறு மாற்று வழியில் ஆற்றுப்படுத்தி (விவசாயம் கிரிவனாகல்கந்துற வௌ குளத்தினை முழுமையாக நிர்மாணித்து நிறைவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விவசாய நிலங்களை யானைகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக நிர்மாணிக்கப்பட்ட மின்சாரக் கம்பிகளுக்கான வெளிக்கள வேலைகளுக்காகவும் நாங்கள் பாரிய பங்களிப்பினை வழங்கினோம்.

ஊவா மாகாணத்தை ஆட்சி செய்த குமாரதாச மன்னர் காலத்தில் நிலவிய குளமொன்றாக நாட்டு வழக்கில் கூறப்படுகின்ற 'மாளிக்காதென்ன வௌ' காடுமண்டி சீரழிந்து காணப்பட்டது. அக்குளத்தை மீண்டும் புனரமைத்து அதனை அண்டி வசிக்கும் மக்கள் எதிர்நோக்கிய பாரிய பிரச்சினையான குடிநீர்த் தேவைக்காகவும் விவசாயத்திற்கும் அவசியமான நீரை அதன் மூலமாகப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது.

 
ஏப்ரயில் 2024
S M T W T F S
31 1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 1 2 3 4